1961 ஆம் ஆண்டு முதல் முறையாக மனிதன் விண்வெளிக்குச் சென்று புவியை வலம் வந்தான். அதன் பிறகு, நிலவுப் பயணம் என 2000 முறை 650க்கு அதிகமான விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். கடந்த 60 ஆண்டுகளாக விண்வெளிப் பயணம் நடைபெற்று வந்தாலும், விண்வெளிக்குச் செல்ல என்னென்ன சவால்கள் இருக்கின்றன? ஏன் அது செலவு அதிகமான பயணம் என்பதைப் பற்றிய சுவாரசியமான கேள்விகள் குழந்தைகளுக்கும் வெகுஜன மக்களுக்கும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் திட்டமிட்டபடி வரவில்லை என்று அறிந்தவுடன், அவருக்கு என்ன ஆயிற்று? எப்பொழுது வருவார்? பத்திரமாகக் கொண்டு வந்து விடுவார்களா? என்ற எண்ணற்ற சந்தேகங்களைப் பலரும் எழுப்பினார்கள்.

செய்தித் தொடர்பு அதிகரித்த இந்த நவீன யுகத்தில், ஒரு சிறிய செய்தியும் பல செய்திகளாக மாறி நமது காதுகளை வந்தடைகிறது. எங்கேயோ யாரோ ஒருவர் உருவாக்கும் செய்தி, சில மணி நேரங்களில் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்து விடுகிறது. அதிலும் நல்ல செய்திகளை விட, சுவாரசியமாகக் கவனத்தை ஈர்க்கும் வகையில் எழுதப்பட்ட தவறான செய்திகளும் எல்லையற்ற வேகத்தில் பலரையும் சென்றடைகின்றன. இந்த நேரத்தில் விண்வெளி வீரர்கள் எப்படி விண்ணுக்கு செல்கிறார்கள்?, அதற்கான விண்கலத்தின் வடிவமைப்பு எப்படி இருக்கும்? விண்வெளி நிலையம் எப்படிச் செயல்படுகிறது, போன்ற செய்திகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது 

சுனிதா வில்லியம்ஸ் அவர்கள் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளை முன்மாதிரியாக வைத்து விண்வெளியில் என்னென்ன ஆராய்ச்சிகள் செய்யப்படலாம், அவர் என்னென்ன ஆராய்ச்சிகள் செய்தார் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

விண்வெளி புறக்கல செயல்பாடுகள் எதற்கு முக்கியம்? கப்பல்கள் சென்று வருவது போல் விண்வெளி நிலையத்தைச் சுற்றி எண்ணற்ற விண்கலங்கள் ஏன் நிறுத்தி வைக்கப்படுகின்றன? இதற்கான திட்டமிடல் என்ன? போன்ற பல தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளது. சுனிதா விண்வெளியில் தங்க வேண்டி வந்தது போல் முன்பே தங்கிய இரண்டு விண்வெளி வீரர்கள் யார்? எந்தச் சூழ்நிலையில் அவர்கள் அப்படி மாட்டிக் கொண்டார்கள் போன்றவற்றையும், சுனிதா கதையோடு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது .

இந்தப் புத்தகம் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிப்பயணம் பற்றிய கதை என்றாலும், அவரைப்போல் பயணப்பட்டு எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சவால்களைச் சந்தித்த அனைத்து விண்வெளி மனிதர்களின் கதையாகவும் இருக்கும்.

விண்வெளிப் பயணத்தின் சவால், சாதனை, விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பு எனப் பல புதிய தகவல்களை இந்தப் புத்தகம் தங்களுக்குக் கொண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “விண்வெளி வீரமங்கை சுனிதா வில்லியம்ஸ்”

Your email address will not be published. Required fields are marked *